திங்கள், ஜனவரி 24

PM 12:01
43




முந்தைய பதிவில் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பதை பற்றியும், அதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது  என்பதை பற்றியும் சொல்லி இருந்தேன். அதற்கு பலரும் பின்னூட்டங்களின் மூலம் தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர்.அப்படி வந்தவை எனக்கு வெறும் பின்னூட்டங்களாக தெரியவில்லை...ஒவ்வொருவரின் ஆழமான உணர்வுகளாக வெளி வந்திருந்தன....அதில் ஒரு இரண்டு  பின்னூட்டங்களை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

அதில் சகோதரர்  ஜோதிஜி அவர்கள் இதற்கு கடுமையான தண்டனைகள் என்று இருந்தால் தவறு செய்ய என்னும் நபர்கள் அச்சம் கொண்டு இந்த செயலை தவிர்ப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மேலோட்டமாக பார்க்கும் போது சரி என்று தோன்றினாலும், சமீபத்தில் அரேபிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை கேட்டறிந்த பின் தண்டனைக்கு பலன் இருக்குமா என்று யோசிக்க வேண்டியதாகிவிட்டது. கடுமையான தண்டனைகளுக்கு பெயர் பெற்ற அரேபிய நாட்டிலேயே இத்தகைய குற்றம் சாதாரணமாக நடைபெறும்  போது தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தவிரவும் நம்ம நாட்டில் இச்செயலுக்கு, 

*  தண்டனை என்று பார்த்தால் பெண்கள் பாதிக்கபட்டால் கொடுக்கப்படும் அதே 7  ஆண்டு முதல் 10  ஆண்டுகள் சிறைவாசம்தான்  குழந்தைகள் பாதிக்கபட்டாலும் என்கின்றனர்...?! 

இது மட்டும் போதாது இந்த விசயத்தில் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படணும்.   

2002  வது ஆண்டின் கணக்கின் படி 89 ,000 குழந்தைகள் பாதிக்க பட்டுள்ளனர். இந்த கணக்கு வெளியில் வந்தவை மட்டுமே வராதவை எத்தனை ஆயிரமோ....?! 

என்  மனதை மிக பாதித்த மற்றொரு பின்னூட்டம் சகோதரர் அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருந்தார்.

//பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.//

ஒவ்வொரு வரிகளும் வேதனை தாங்கி இருந்ததை உணரமுடிந்தது. ஆண் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கபடுகிறார்கள் என்பதை இவரது பின்னூட்டம் ஊர்சிதப் படுத்தியது.  

இந்த பதிவிற்கு மிக நெருங்கிய சிறுகதை ஒன்றை இவர் எழுதி இருக்கிறார்.....மனம் நடுங்க செய்ய கூடிய  ஒரு விஷயத்தை கருவாக எடுத்து சிறிதும் ஆபாசம் இன்றி எழுதி இருக்கிறார். தயவுசெய்து அதை அனைவரும் படியுங்கள்... 

அந்த கதை படிக்க  இங்கே செல்லுங்கள்.  



மற்றொரு வேதனையான அனுபவம் ஒன்று 

மேலும் எனது பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி மெயில் மூலம் தனது இன்றைய நிலையை மிகுந்த துயரத்துடன் எழுதி இருந்தார். மிக பெரிய மடலின் சுருக்கத்தை மட்டுமே இங்கே பகிர்கின்றேன் (அவர்களின் அனுமதியுடன் ) அவரது பெயர் சுசீலா, ஆந்திர மாநில தலைநகரில் வசிக்கிறார், படித்த பட்டதாரி பெண்,  பல்கலைகழகத்தில் படிப்பிற்காக தங்க மெடல் வாங்கியவர், பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.   திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தைகள் இல்லை, முக்கியமாக கணவன் மனைவியருக்குள் எது நடக்க வேண்டுமோ அது இன்று வரை நடக்கவில்லை...!? 

காரணம் சிறு வயதில் அந்த பெண் அனுபவித்திருந்த பாலியல் துன்புறுத்தல்கள் ??! நெருங்கிய உறவினர் ஒருவரால் பத்து வயதில் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் இந்த பெண்ணின் மனதில் ஆற்றாமல் வடுவாக இருந்திருக்கிறது. இப்படி வடு ஒன்று இருப்பதை,  முதல் இரவில் கணவனின் முதல் தொடுதலின்  போதுதான் இவரே உணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவிலும் கணவனின் அருகாமை என்றாலே உடலில் ஒரு படபடப்பு சேர்ந்து கொண்டு , முகம் எல்லாம் வியர்த்து அலறி அடித்து படுக்கையின் ஓரமாக ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்து கொள்வாராம். 

ஆரம்பத்தில் இவரது கணவன், புது பெண்தானே போக போக சரியாகி விடும் என்று மனதை தேற்றி கொண்டுள்ளார், மாதகணக்கில் தொடரவும், வற்புறுத்தி  மருத்துவரிடம் அழைத்து சென்று உள்ளார். தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் உடல் சிறிது தேறி வந்திருக்கிறது, மனமோ அதே பழைய நிலையில் !!? நல்ல வேளை இவருக்கு அமைந்த கணவன் நல்லவராக இருப்பதால் காலப்போக்கில் மனைவி சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தி கொண்டுவருகிறார்.

இந்த பெண்ணின் மடல் ஒரு உதாரணம் தான் , இது போல் இன்னும் எத்தனையோ.....?? பாவம் ஓரிடம்  பழி ஓரிடம்  என்பது போல், தவறு செய்தவன் எங்கோ நிம்மதியாக இருக்கிறான், இந்த பெண்ணை போன்றவர்கள் வாழ வகையற்று நரகத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சனை முந்தைய பதிவில் சொன்ன மாதிரி உளவியல் நோய் உள்ளவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை. சாதாரணமாக குடும்ப வாழ்வில் இருப்பவர்களும் சில சூழ்நிலைகளில் இந்த பாவத்தை செய்ய நேரிடுகிறது என்பது நிதர்சனம்.  



சூழ்நிலைகள்

*  திருமணம் முடிந்த பின்னர் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற சமயங்களில்.....

*  விவாகரத்தான கணவர்கள் தனிமையில் இருக்கும் போது.....

*  மனைவி இறந்த சமயங்களில்.....

* மனைவி நோய்வாய்ப்பட்ட சமயங்களில்..... 

*  பணியில் இருக்கும் இல்லாத ஒரு சில வயதானவர்கள் (தனிமை கிடைத்தால்)....

இது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறவே செய்கிறார்கள். தங்களுக்கு வசதியாக சிறுவர், சிறுமிகளை பயன்படுத்திக்கொள்(கொல்)கின்றனர்.

தீர்வு என்ன ?? 

சகோதரர் ரஜின் அவர்கள் இந்த பாதக செயலுக்கு தீர்வு ஒன்றை தனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். 

//இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
செய்வார்களா?//
  
மிகவும் சரியான யோசனையாக எனக்கு தெரிந்தது...பள்ளிகளின்  மூலமாக இந்த பிரச்சனையின் தீவிரத்தை பிள்ளைகள் உணரும்படி அறிவுறுத்த வேண்டும்.  பொதுவாக பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிள்ளைகளின் மனதில் நன்றாக பதிந்து விடும். தவிரவும் சக மாணவர்களுடன் இது பற்றி அவர்கள் கலந்து பேசிக்கொள்ளவும் எதுவாக இருக்கும்.

நம்  பிள்ளைகள் எந்த வித மோசமான பாதகத்திற்க்கும் ஆளாகிவிடாமல் அவர்களை பாதுகாத்து காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை.  அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைக்க காட்டும் தீவிரத்தை, அவர்களின் நிகழ்கால வளர்ப்பிலும் கொஞ்சம் காட்டுங்கள்.  

எதிர்கால சமூதாயம் சிறப்பாக அமைய பதிவுலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை ஒத்துழைப்பு கொடுப்போம்.....

இந்த பிரச்சனை சம்பந்த பட்ட பதிவுகளை தேடி எடுத்து படியுங்கள், பலரிடம் இத்தகைய பதிவுகளை கொண்டு போய் சேருங்கள், பிரச்சனையின் தீவிரம் பலரையும் சென்று அடைய உதவுங்கள்.  




படம் - நன்றி கூகுள் 


Tweet

43 கருத்துகள்:

  1. தமிழகத்தில், இந்தியாவில் இந்தப் பிரச்சினையின் வீரியம் குறித்து எனக்குத் தெரியவில்லை! ஆனால் உங்கள் பதிவு ஒரு வேதனைகலந்த பெரிய விழிப்புணர்வாய் அமைந்ததை மறுப்பதற்கில்லை! இது குறித்த என்னாலான விழிப்புணர்வுகளையும், முக்கியமாக செயல்படுத்தத்தகுந்த, எளிமையான தீர்வுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்! விவரிக்க வார்த்தையில்லை,பதிவுலகில் ஒருவனாய் இருப்பதிலும், உங்களின் சகவலைப்பதிவர் என்பதிலும் மிக மிக மகிழ்ச்சிகொள்கிறேன். நன்றிகளும், வாழ்த்துகளும் உங்களுக்கு!
    பத்மஹரி,
    http://padmahari.wrodpress.com

    பதிலளிநீக்கு
  2. சோதரி நான் ஒன்று சொல்கிறேன் கோபித்துக்கொள்ளாதீர்கள்! நீங்கள் சொன்ன பிரச்சனை நியாயமானது. அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை!! ஆனால் அதற்கு சொல்லப்பட்ட தீர்வுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.



    விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலோ, பிள்ளைகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதாலோ, குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாலோ ஒரு போதுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது!



    இதற்கான தீர்வு வேறு வகையில் காணப்பட வேண்டும்! அது என்ன? இந்த விஷயம் பற்றி மிக நீளமாக எழுத வேண்டியுள்ளது! ம்.... நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  3. @@ மாத்தி யோசி கூறியது...

    //இதற்கான தீர்வு வேறு வகையில் காணப்பட வேண்டும்! அது என்ன? இந்த விஷயம் பற்றி மிக நீளமாக எழுத வேண்டியுள்ளது! ம்.... நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்!//

    எனக்கு சரி என்று பட்ட ஒரு யோசனை என்று இதை சொல்லி இருக்கிறேன்...மற்றவர்களும் இதனை பற்றிய தீர்வுகளை யோசிக்கவும், பகிரவும் வேண்டும் என்பதே எனது மேலான வேண்டுகோள் சகோ.

    உங்களின் தீர்வு என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளேன்...விரைவில் எழுத வேண்டுகிறேன்.

    வெளிப்படையான உங்களின் கருத்திற்கு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த விசயத்தில் எளிதில் தீர்வு கிடைப்பது சாத்தியமல்ல! பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனநல மருத்துவர்கள் மூலம் கஷ்டப்பட்டு சரி செய்யலாமே தவிர தடுப்பது மிகக் கடினமான விஷயமாகும்!

    பதிலளிநீக்கு
  5. கௌசல்யா இந்த பிரச்சனையை எப்படி புரியும் படி இதமாக விளக்க முடியுமோ அப்படி சொல்லி சமுதாயத்தின் மீதான உங்கள் அக்கறையை வெளிப்படுத்தியது நிச்சயம் பாராட்ட வேண்டும்..நிச்சயம் இந்த இடுகை அநேக நபர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்டுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான ஒரு பதிவு...
    என்னைப் பொருத்தமட்டில் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கலாம்.
    தவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுதும் நினைத்து வருந்தும்படி தண்டனை இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. Well done kousalya for this post.parents should be confidant in recognizing and confront such cases.
    we need to accept the ugly truth that we live in an unsafe dirty world.if no body speaks up, this abuse will not stop.at schools also they should be taught about these issues.kids need to be taught to say a "NO"AT CERTAIN INSTANCES .and assure them that their "NO" will be respected.

    பதிலளிநீக்கு
  8. உருக்கமான இந்த பதிவை வாசித்து விட்டு, ஏதும் சொல்ல வார்த்தையின்றி, மனம் கனத்துப் போய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்கில் உள்ளக் கதை படிக்கவே ரொம்பக் கொடூரமாக இருக்கிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதை பீதியைக் கிளப்புவதென்னவோ உண்மை.

    எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இந்த தவறுகள் நடப்பதை தடுக்க முடிவதே இல்லை. சட்டங்கள் மிகக்கடுமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனாலும் இதை வெளியில் சட்டத்திற்கு முன் கொண்டு வர பெற்றோர்களே முன்வராதது..என்ன சொல்ல?

    குழந்தைகளுக்கு முடிந்தவரை எல்லா எச்சரிக்கைகளையும் கொடுப்பது மட்டும்தான் இப்போதைக்கு சாத்தியப்படும்.

    பதிலளிநீக்கு
  10. சாரி கௌசல்யா பதில் எழுத கொஞ்சம் லேட்டாகிடுச்சு! இந்தப் பிரச்னைக்கு பொருத்தமான தீர்வாக நான் நினைப்பது கொஞ்சம் சிக்கலானது! முதலில் இந்த உலகம் கொடியது என்றோ, இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றோ புலம்புவதை நாம் நிறுத்த வேண்டும்!



    மேலை நாடுகளில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்! அங்கு சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறைவு! காரணம் என்ன தெரியுமா? ஒருவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவன் பாலியலுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது கிடையாது! இங்கு பாலியல் பரவலாக்கப்பட்டுள்ளது!



    ஒருவன் நினைத்த நொடியில் தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முடியும்! நமக்கு காப்பி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது, தாராளமாக காப்பி சாப்பிடுகிறோம்! அதில் எப்போதாவது நமக்கு பிரச்சனை வந்ததுண்டா? இல்லையே? யாராவது குழந்தை காப்பி சாப்பிடும் போது ஓடிச்சென்று பறித்து நாம் சாப்பிடுகிறோமா? இல்லையே!

    இங்கு வெளிநாடுகளில் பாலியல் என்பது காப்பி சாப்பிடுவது போல - ரொம்ப சிம்பிளானது!



    இந்த உலகத்தில் ஆணைப் படைத்தது பெண்ணுக்காக, பெண்ணைப் படைத்தது ஆணுக்காக! அவ்வளவுதான்! மற்றும்படி மனிதர்களும் விலங்குகள்தான்! நாம்தான் கலாச்சாரம் பண்பாடு, ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற பெயர்களில் எல்லாவற்றையும் அடக்கியும் பொத்தியும் வைக்கிறோம்! அடக்கப்படும் எதுவுமே உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்யும்! பாலியல் என்பது இயற்கையானது - அதை எதற்கு அடக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை!



    ஒருகிராமத்தில் உள்ள ஒரு லட்சம் பேரை ஐந்து நாட்களுக்கு உணவு ஏதும் கொடுக்காமல் ஒரு பெரிய சிறைக்குள் அடைத்து வைத்தால், ஐந்து நாள் முடிவில் ஒருவரை ஒருவர் கொன்று தின்று - அரைவாசிப்பேர்தான் உயிருடன் இருப்பார்கள்! இது உண்மை!



    வெள்ளைக்காரன் எல்லாத்தடைகளையும் கடந்து வெளியே வந்து விட்டான்! நாம் தான் ஆயிரம் கட்டுப்பாடுகளை நமக்குள் வைத்துக்கொண்டு பல தவறுகள் செய்துகொண்டு இருக்கிறோம்!



    ஒரு 18 பெண்ணை நடுத்தர வயது நபருடன் நம்பி எங்காவது அனுப்ப முடியுமா? ஆனால் ஒரு வெள்ளைக்காரனுடன் நம்பி அனுப்ப முடியும்! இங்கு பாரிசில் நாங்கள் ரெயினில் போகும்போது முன்சீட்டில் இருப்பவர்கள் அரை குறை ஆடைகளுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டு இருப்பார்கள்! நானோ எதிர் சீட்டிலிருந்து குமுதமோ விகடனோ படித்துக்கொண்டு போவேன்! அவர்களது செயல் ஒரு போதுமே என்னை இடையூறு செய்வது கிடையாது! எல்லாமே பார்த்துப் பழகிவிட்டது!! அதனால் மனம் ஒருபோதுமே அலை பாய்வது கிடையாது!



    ஆனால் நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியமா? இல்லையே! ஒன்று சொல்கிறேன்! இன்னும் ஆயிரம் வருடங்கள் போனாலும், நாம் சில தடைகளில் இருந்து வெளியே வராவிட்டால் பாலியல் வல்லுறவுகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும், காதலுக்காக தற்கொலை செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கும்! தண்டனைகள் கடுமையானால் மேலும் சமூகத்தில் பிரச்சனைகள் தான் உருவாகும்! ஒரு போதுமே பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறைத்தண்டனையோ, தூக்குத்தண்டனையோ தீர்வு அல்ல!



    இதெல்லாம் சொல்லப்போனால் குற்றவாளி என்கிறார்கள்! எமது கலாச்சாரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்கிறார்கள்! முடியல...!



    சகோதரி, விஷயங்களை வெளிப்படையாகவே எழுதியுள்ளேன்! சரியென்று தோன்றினால் பிரசுரிக்கவும்! இல்லையென்றால் திருப்பி அனுப்பிவிடவும்! நன்றி!!

    பதிலளிநீக்கு
  11. மாத்தி யோசி சொல்வதில் ஒன்றை ஏற்க முடிகிறது: செக்ஸ் இன்னும் கிழக்கத்திய கலாசாரத்தில் மறைபொருளாகவே இருப்பதால் கட்டுப்பாட்டின் பெயரால் சில கண்றாவிகள் நடக்க ஏதுவாகிறது.

    மேலை நாடுகளில் பாலியலுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது அறியாமை. செக்ஸ் என்றால் முகம் சுளிக்கவோ பயப்படவோ இல்லையெனினும், இங்கேயும் கொடுமைகள் அசிங்கமாகத் தான் நடக்கின்றன. child sexual abuse பற்றி செய்தி வராத நாளே இல்லை. பாலியல் கொடுமையில் மேலை நாட்டவர் எந்த விதத்திலும் சளைத்தவரல்ல. இன்றைக்கு அமெரிக்காவில் நடக்கும் சமூக வழக்குகளில் child sexual abuse முதலிடத்தில் இருக்கிறது. (sexual offenders list இணையத்திலேயே கிடைக்கிறது, பார்க்கவும்). இரண்டு மாதங்கள் முன்பு கூட கலிபோர்னியாவில் போலீஸ் கண்ணெதிரிலேயே பத்து வருடங்கள் போல் சிறு பெண்ணை பலாத்காரம் செய்து வந்தவன் பிடிபட்ட கதை மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலை நாடுகள் அத்தனையிலும் (பிரான்சு, சுவிஸ் நாடுகளில் கொஞ்சம் குறைவு) குழந்தைகளை பாலியலுக்குப் பயன்படுத்துவது சாதாரணமாக நடக்கிறது. இதற்கான ஆதாரங்களை who ஆவணங்களில் பார்க்கலாம்.

    பாலியல் கொடுமைகளுக்குக் கட்டுப்பாடே காரணம் என்று சொல்வது மிக ஆபத்தான அபிப்பிராயம். பாலியல் கொடுமைகளுக்குக் காரணம் அறியாமை. இவ்வளவு சுலபமாகச் சொல்கிறேனே என்று நினைக்க வேண்டாம், அது தான் காரணம்.

    இந்தக் கொடுமையைத் தண்டனை வழியாக அழிக்க நினைப்பதும் அறியாமை. தண்டனை எனும் பொழுதே "கொடுமை நடந்து விட்டதை" அனுமதித்து விட்டோம்.

    பாலியல் என்பது இயற்கையான உணர்ச்சி - அதைத் தவறு குற்றம் என்ற உணர்வால் வடிகட்டப் பார்க்கும் பொழுது பிழையேற்படுவது இயற்கை. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றி இன்னொரு பின்னூட்டத்தில் எழுதுகிறேன். (முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்பது சந்தேகமே).

    மேலை நாடுகளில் கடைபிடிக்கப் படும் சில முறைகளும், கீழை நாடுகளில் புதைந்திருக்கும் சில கலாசார வரம்புகளும் கலந்த தீர்வு. பிறகு எழுதுகிறேன். (இன்னாய்யா இந்த ஆளு? பின்னூட்டம் எளுதாம பதிவே எளுதுறானே?)

    பதிலளிநீக்கு
  12. தலைப்புச் செய்திகளாட்டம் போட்டிருக்கீங்களே? நன்றி. நூத்திப்பத்து முறை உங்க வலைப்பூவிலிருந்து ஒரே நாள்ள பெரியவர் ஆசி கதை படிக்க வந்திருக்காங்க! நன்றி. (படிச்சுட்டு பேயறஞ்ச மாதிரி ஆயிருச்சுனு ஒண்ணு ரெண்டு இமெயில் கூட வந்திருக்கு:)

    பதிலளிநீக்கு
  13. கௌசி...வெளிநாட்டில் வசித்தாலும் வாசிக்கும்போது மனதில் ஏதோ ஒரு பயம்.”மாத்தி யோசி” என்பவர் குறிப்பிட்ட விஷ்யங்களும் சரியே.ஆனாலும்... !

    பதிலளிநீக்கு
  14. மன்னிக்கவும். அவசரப் பிழையில் பொருளே மாறிவிட்டது.

    'பாலியல் என்பது இயற்கையான உணர்ச்சி - அதைத் தவறு குற்றம் என்ற உணர்வால் வடிகட்டப் பார்க்கும் பொழுது பிழையேற்படுவது இயற்கை. எனினும், உறவு கொள்ளத் தகுந்த வயதும் பக்குவமும் வராதவருடன் தகாத உறவு முறை தவறே, குற்றமே என்ற உணர்வை இளவயதிலிருந்தே வளர்க்கவேண்டும்.' என்று எழுத நினைத்திருந்தேன். வெட்டு-ஒட்டில் பிசகு.

    வெள்ளைக்காரன் நாட்டில் நடந்த இன்னொரு கேவலம் - சமீபத்தில் ஆஸ்ட்ரியாவில் தன் சொந்த மகளுடன் சிறுமியாக இருந்த நாளிலிருந்து இருபது வருடங்கள் போல் பலவந்தமாக உறவு கொண்டு பிள்ளைகள் பெற்ற கொடியவனைப் பற்றி இணையத்தில் படித்திருக்கலாம், படிக்கலாம். எதற்குச் சொல்கிறேன் என்றால் இங்கே வக்கிரத்தின் நிறமும் சிவப்பு தான்.

    பதிலளிநீக்கு
  15. சிறு வயதில் அனுபவித்தப் பாலியல் கொடுமையினால் வளர்ந்த பின் உறவு கொள்ள முடியவில்லையென்றால் சுலபமாகக் குணப்படுத்தலாம். தேர்ந்த உளவியல் நிபுணர், ஹிப்னோசிஸ் இரண்டையும் வைத்து இதைக் குணப்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  16. திரு அப்பாத்துரை அவர்களுக்கு நான் சிலவிஷயங்களைச் சொல்ல வேண்டி உள்ளது! இப்போது வேலைக்குப் போகிறேன்! வந்து எழுதுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  17. இதன் தாக்கம் நம் தமிழகத்தில் அதிகம் இருப்பது போல் தெரியவில்லை. ஒரு சில நிகழ்வுகளைத் தவிர. இருந்து இதற்கான நிரந்தர தீர்வு உடனடியாக கிடைக்கும் என்று நம்பமுடியாது. ஒரு கை ஓசை சப்தம் எழுப்பாது. எல்லாருமாக தீவிரமாக இறங்கினால் தீர்வின் வாசலை அடையலாம்.

    பதிலளிநீக்கு
  18. சகோ கௌசல்யா...
    முதற்கண் எனது பாராட்டுகள் உங்களுக்கு..அவசியமான சமூக விழுப்புணர்வூட்டும் பதிவை தந்தமைக்கு...

    இங்கு பதியப்பட்டுவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது..இது குறித்து விரிவான பதிவு ஒன்று எழுதுவது அவசியமாகிறது..

    விரைவில் பதிக்கிறேன்..எல்லொருடைய கருத்துக்களை கோர்த்து,அதில் உள்ள சாதக பாதகங்களுடன்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  19. குறைந்தபட்சம் நம் வீட்டு குழந்தைகளையாவது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
    குட் டச், பேட் டச் பற்றி பள்ளிகளிலேய கற்று தருவது மிக முக்கியம் தான். ஆனால் மிக சென்சிட்டிவான இந்த விஷயத்தை வியாபாரமாகிவிட்ட கல்விநிறுவன் ஆசிரியர்கள் எப்படி சொல்லித் தருவார்கள் என்பது கவலைக்குரிய
    விஷயம்.

    பதிலளிநீக்கு
  20. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    பதிலளிநீக்கு
  21. மாத்தி யோசி, அப்பாதுரை இருவரின் கருத்துக்களும் நம் கண்களைத் திறக்கின்றன.... hope their debate will continue... என்னாட்டில் எப்படியோ, நமது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கௌசல்யா madam சொன்னது போல good touch, bad touch differences மற்றும் மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்(thro meditation) கற்றுத்தந்தால் போதும்.. சிறு குழந்தைகளை தனியே விடக்கூடாது(உறவினர்கள் வீட்டில் கூட...) this article reminds me of the film அச்சமுண்டு, அச்சமுண்டு starred by prasanna, sneha... such films never / seldom receive recognition... thanx கௌசல்யா madam for such an eye opener...

    பதிலளிநீக்கு
  22. @@ பத்மஹரி said...

    // இது குறித்த என்னாலான விழிப்புணர்வுகளையும், முக்கியமாக செயல்படுத்தத்தகுந்த, எளிமையான தீர்வுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்! //

    ஹரி, நீங்கள் இது குறித்த பதிவை எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்...

    கருத்திற்கு என் நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  23. @@ எஸ்.கே said...

    //பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனநல மருத்துவர்கள் மூலம் கஷ்டப்பட்டு சரி செய்யலாமே தவிர தடுப்பது மிகக் கடினமான விஷயமாகும்//

    எந்த தீமைகளை முழுதாய் தடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால் நம் குழந்தைகளை வரும்முன் பாதுகாத்து கொள்ளலாமே...

    அதற்கு பெற்றோர்களின் அதிக கவனம் மட்டுமே தேவை.

    நன்றி எஸ்.கே.

    பதிலளிநீக்கு
  24. @@ asiya omar said...

    //நிச்சயம் இந்த இடுகை அநேக நபர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்டுத்தும்//

    உங்களின் இந்த வார்த்தை எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது தோழி...ஓன்று இரண்டு மனங்களாவது தங்கள் பிள்ளைகளை எண்ணி கவனம் எடுத்து கொண்டால் அதுவே ஒரு நிறைவு தான்.

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  25. @@அன்பரசன் said...

    //கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கலாம்.
    தவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுதும் நினைத்து வருந்தும்படி தண்டனை இருக்க வேண்டும்//

    தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்றால் விஷயம் வெளியே வரவேண்டும் முதலில்...ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளியே சொல்வது இல்லை...

    சிறிய அளவில் ஏற்படும் தொடுதலை ஒரு பெரிய விசயமாக எடுத்து கொள்வதில்லை...நாளடைவில் சரியாகி விடும் என்று சமாதானம் படுத்தி கொள்கிறார்கள்.

    ஆனால் இந்த தொடுதல் அந்த குழந்தையில் உள்மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று நினைப்பது இல்லை.

    நன்றி அன்பரசன்.

    பதிலளிநீக்கு
  26. @@ angelin said...

    //at schools also they should be taught about these issues.kids need to be taught to say a "NO"AT CERTAIN INSTANCES .and assure them that their "NO" will be respected.//

    காலம் எங்கயோ போய் கொண்டிருக்கிறது தோழி...இன்னும் வெளியில் இதை பேசாமல் மூடி வைத்து கொண்டே இருந்தால் பல பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே போகுமே தவிர குறைய போவதில்லை.

    எது தவறு என்று சொல்லி கொடுப்பதை விட முக்கியம்,அவர்கள் சொல்லும் குறைகளை,அவர்களின் பேச்சை கவனித்து கேட்கவேண்டும்...குறிப்பா யார் மீதும் புகார்கள் சொன்னால் அவசியம் கேட்கணும்.

    உங்களின் அக்கறையான கருத்திற்கு ரொம்ப நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  27. @@ Chitra said...

    //உருக்கமான இந்த பதிவை வாசித்து விட்டு, ஏதும் சொல்ல வார்த்தையின்றி, மனம் கனத்துப் போய் இருக்கிறேன்.//

    பாதிக்கப்பட்டவர்களை எண்ணும்போது இத்தகைய உணர்வுகள் தவிர்க்க முடியாதுப்பா...

    பதிலளிநீக்கு
  28. மிக அவசியமான அலசல் கௌசல்யா.
    சொல்லியும் சொல்லாமலும் பிள்ளைகள் எவ்வளவோ கொடுமைகளை எல்லாநாட்டிலும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இதுமாதிரி எச்சரிக்கைகள் இப்போது அவசியம்.

    பதிலளிநீக்கு
  29. @@ Sriakila said...

    //நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்கில் உள்ளக் கதை படிக்கவே ரொம்பக் கொடூரமாக இருக்கிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதை பீதியைக் கிளப்புவதென்னவோ உண்மை.//

    ஆமாம் தோழி நான் படித்துவிட்டு அதிர்ந்து விட்டேன்...அதன் தாக்கத்தில் தான் அடுத்த பதிவையே நான் எழுதினேன்.

    //எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இந்த தவறுகள் நடப்பதை தடுக்க முடிவதே இல்லை. சட்டங்கள் மிகக்கடுமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனாலும் இதை வெளியில் சட்டத்திற்கு முன் கொண்டு வர பெற்றோர்களே முன்வராதது..என்ன சொல்ல?//

    பெற்றோர்கள் முன் வராத வரை தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்...வெளியில் சொல்ல இயலவில்லை என்றாலும் பரவாயில்லை...பாதிக்கப்பட்ட குழந்தையை உடனே (மனநல) மருத்துவரிடம் கொண்டு சென்றால் நல்லது.

    //குழந்தைகளுக்கு முடிந்தவரை எல்லா எச்சரிக்கைகளையும் கொடுப்பது மட்டும்தான் இப்போதைக்கு சாத்தியப்படும்//

    ம்...ஆம் தோழி...வரும் முன் காத்து கொள்வோம் நம் செல்வங்களை !

    கருத்திற்கு நன்றி அகிலா

    பதிலளிநீக்கு
  30. @@ மாத்தி யோசி கூறியது...

    //இங்கு வெளிநாடுகளில் பாலியல் என்பது காப்பி சாப்பிடுவது போல - ரொம்ப சிம்பிளானது!//

    சகோ எனக்கு வெளிநாடுகளில் இருக்கும் நடைமுறைகளை பற்றி அவ்வளவாக தெரியாது என்பதால் இதனை பற்றி கருத்துக்கள் சொல்ல இயலவில்லை.

    //நாம்தான் கலாச்சாரம் பண்பாடு, ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற பெயர்களில் எல்லாவற்றையும் அடக்கியும் பொத்தியும் வைக்கிறோம்!

    நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது. அதை நல்லது, கேட்டது என்று பிரிப்பது சரி அன்று. ஓவராக அதில் ஆழ்ந்து போனால் மூழ்கி போய்விடுவோம், தவறு என்று விலகி போனாலும் ஏதாவது சந்தர்பத்தில் நம்மை அறியாமல் சிக்கி கொள்வோம், அளவோடு பார்த்து கொள்வது உத்தமம், இந்த இச்சைகளை தாண்டி கடந்து போய் விட்டால் பேரானந்தம்.

    இதுவே பாலியல் குறித்து எனக்கு தெரிந்த குறைந்த பட்ச அறிவு...
    கலாச்சாரம் பண்பாடு என்பது பற்றி வேறு ஒரு சமயத்தில் விவாதிக்கலாம் சகோ...

    //சகோதரி, விஷயங்களை வெளிப்படையாகவே எழுதியுள்ளேன்! சரியென்று தோன்றினால் பிரசுரிக்கவும்! //

    உங்களது கருத்துக்களில் ஒரு சில எனக்கும் ஏற்புடையது தான்.

    தவிரவும் பின்னூட்டங்களை மகிழ்வுடன் எதிர்கொள்வேன், முக்கியமாக நல்ல விமர்சனங்களை...தகாத வார்த்தைகளுக்கு மட்டும் இங்கே இடம் இல்லை சகோ.

    உங்களின் விரிவான கருத்திற்கு எனது வணக்கங்கள்.

    நேரமின்மையால் உடனே பதில் சொல்ல இயலவில்லை...

    பொறுத்துக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  31. திரு அப்பாத்துரை அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன்!



    " மேலை நாடுகளில் பாலியலுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது அறியாமை. செக்ஸ் என்றால் முகம் சுளிக்கவோ பயப்படவோ இல்லையெனினும், இங்கேயும் கொடுமைகள் அசிங்கமாகத் தான் நடக்கின்றன. "



    இது உண்மைதான்! முதலில் நான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னது மேலை நாடுகளில் இருந்து கொண்டு குற்றங்கள் செய்யும் பிற நாட்டவர்களை அல்ல! இங்கு பிரான்சில் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வாழ்கிறார்கள்! இந்த நாட்டில் நடக்கும் சட்ட மீறல்கள் , கொலைகள், கடத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்ற அத்தனைக்கும் காரணம் இங்கு வாழும் வெளிநாட்டவர்களே!



    ஒரு ஒரிஜினல் பிரெஞ்சுக்காரனோ, பிரிடிஷ்காரனோ, அமெரிக்கனோ இத்தகைய இழி செயலில் ஈடுபடுவதில்லை! நீங்கள் சொன்ன புள்ளிவிபரங்கள் எல்லாம் நானும் அறிந்துதான் வைத்திருக்கிறேன்! ஆனால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் யார்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? என்று ஆராய்ந்து பாருங்கள்! உண்மைவிளங்கும்!



    நீங்கள் வசிப்பது அமெரிக்காவில் என்றால், கண்டிப்பாக ஒரிஜினல் அமெரிக்கர்களோடு பழகி இருப்பீர்கள்! அத்துடன் உங்கு வசிக்கும் பிற நாட்டவர்களுடனும் பழகி இருப்பீர்கள்! சொல்லுங்கள் யார் ஒழுங்காக இருக்கிறார்கள்? நான் இங்கு ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டால், பிரான்ஸ் அரசுக்குத்தான் கெட்ட பேர் வரும்.நியூஸ் " பிரான்சில் படுகொலைகள் அதிகரிப்பு " என்றுதான் வரும்!



    ஆகவே நண்பரே மேலை நாடுகளில் வாழும் கீழைத்தேய நாட்டவர்களை, பின்பற்றச் சொல்லி நான் சொல்லவில்லை! இங்குள்ள ஒரிஜினலைப் பின்பற்றுங்கள்!



    தவிரவும் இங்கு கௌசல்யாவின் விவாதம் இது குறித்தது அல்ல! எமது நாடுகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் எப்படித் தடுப்பது என்பதே இங்கு பிரச்சனை ஆகும்! இதற்கு நான் மறுபடியும் சொல்கிறேன் ( ஒரிஜினல் ) மேலை நாட்டவர்களின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே!



    இன்னுமொரு உதாரணம் சொல்கிறேன்! இங்கு பிரான்சிலும் எமது கலாச்சாரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, பெண்களை வெளியே விடாமல் வீட்டுக்கும் அடைத்து வைத்திருக்கும் வியாதி படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்! அண்மையில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிரான்சில் தமிழ் இளைஞர் குழுக்கள் எப்படி கொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை இங்குள்ள தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தி இருப்பதை!



    இங்கு பிரான்சில் தமிழர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு காரணமே " நான் லவ் பண்ணுற பெண்ணை நீ பார்த்துவிட்டாய் " என்பதுதான்! பெண்களைக் காரணமாக வைத்து தான் இங்கு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்! யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு தமிழ்ப்பெண்ணை விட, இங்கிருக்கும் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகம் வைக்கிறார்கள்! இதற்கு காரணம் கலாச்சாரம் என்ற இத்துப்போன ஒன்றைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பதுதான்!



    நண்பர்களே நமது நாடுகளில் பாலியல் கொடுமை மட்டுமன்றி , வேறு பல வன்முறைகளில் இருந்தும் நாம் விடுபடலாம் - கலாச்சாரம், கட்டுப்பாடுகள் இவற்றில் இருந்து வெளியே வந்தால்!!



    சகோ கௌசல்யாவுக்கு!

    இத்தகைய நீண்ட விவாதத்துக்கு களம் தந்தமைக்கு நன்றி! கலாச்சாரம், பண்பாடு பற்றி எழுதப் போவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள்! கண்டிப்பாக எழுதுங்கள்! நீண்ட பின்னூட்டத்துடன் வருவேன்! நன்றி!!

    பதிலளிநீக்கு
  32. @@ அப்பாதுரை said...

    //மேலை நாடுகளில் பாலியலுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது அறியாமை. செக்ஸ் என்றால் முகம் சுளிக்கவோ பயப்படவோ இல்லையெனினும், இங்கேயும் கொடுமைகள் அசிங்கமாகத் தான் நடக்கின்றன. child sexual abuse பற்றி செய்தி வராத நாளே இல்லை.//

    எல்லா இடத்திலும் மனிதர்கள் சில விசயங்களில் ஒரே விதமாக தான் இருக்கிறார்கள் போல. பாலியல் கல்வி பயிற்றுவிக்க பட்டும் இத் தவறுகள் நடக்கிறது என்றால் வேறு என்ன தான் இதற்கு தீர்வு என்ற வினாவே எழுகிறது.

    //உறவு கொள்ளத் தகுந்த வயதும் பக்குவமும் வராதவருடன் தகாத உறவு முறை தவறே, குற்றமே என்ற உணர்வை இளவயதிலிருந்தே வளர்க்கவேண்டும்.'//

    "சிறு வயதில் இருந்தே இந்த உணர்வை வளர்க்க வேண்டும்."

    இந்த கருத்து மிகவும் சரி என்று எனக்கு தெரிகிறது. இதுவரை பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் இருந்து தங்களை காத்து கொள்வதை பற்றி மட்டும் சொல்லி தந்தால் நம் பிள்ளை பிழைத்து கொள்ளும் என்ற புரிதல் தான் எனக்கு இருந்தது.

    அதை விட முக்கியம், பிறரிடம் அந்த மாதிரி நடக்கணும் என்ற எண்ணமே ஏற்படக்கூடாது என்பதை அவர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கணும்,

    சகோதரர் அப்பாதுரை உங்களின் கருத்துக்கள் நிச்சயம் பலருக்கு பயன்படும்...

    பொறுமையாக உங்களின் நேரத்தை செலவிட்டு நல்ல கருத்துக்களை இங்கே பகிர்ந்ததிர்க்கு நான் பெருமிதம் அடைகிறேன்.

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  33. @@ ஹேமா said...

    //கௌசி...வெளிநாட்டில் வசித்தாலும் வாசிக்கும்போது மனதில் ஏதோ ஒரு பயம்.”மாத்தி யோசி” என்பவர் குறிப்பிட்ட விஷ்யங்களும் சரியே.ஆனாலும்...?!//

    உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லலாமே ஹேமா, நான் தெரிந்து கொள்வேனே ?!

    பெற்றோர்கள் எங்கே இருந்தாலும் தங்கள் குழந்தைகள் குறித்த அச்சம் இருப்பது சரிதானே...

    பதிலளிநீக்கு
  34. @@ சே.குமார் said...

    //இதன் தாக்கம் நம் தமிழகத்தில் அதிகம் இருப்பது போல் தெரியவில்லை. ஒரு சில நிகழ்வுகளைத் தவிர. இருந்து இதற்கான நிரந்தர தீர்வு உடனடியாக கிடைக்கும் என்று நம்பமுடியாது.//

    இல்லை குமார்...இது சகஜமா எல்லா இடத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது....வெளியில் வருவது ஒரு சில மட்டுமே...

    மனநல மருத்துவரிடம் சென்று கேட்டு பார்த்தால் அவரிடம் வரும் நோயாளிகளில் பெரும்பாலும் இதன் பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத்தான் இருக்கும்.

    நிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய தவறுகளின் பின்னால் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சம்பந்தப்பட்ட பாதிப்பு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  35. @@ RAZIN ABDUL RAHMAN said...

    //இங்கு பதியப்பட்டுவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது..இது குறித்து விரிவான பதிவு ஒன்று எழுதுவது அவசியமாகிறது..//

    உங்கள் மனதில் இதை பற்றி எழுதணும் என்கிற தூண்டுதலை ஏற்படுத்திய பின்னூட்டங்களை கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

    அவசியம் எழுதுங்கள், எழுதிட்டு முடிந்தால் சொல்லுங்கள்...காத்திருக்கிறேன் ரஜின்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  36. @@ ஜீவன்சிவம் said...

    //மிக சென்சிட்டிவான இந்த விஷயத்தை வியாபாரமாகிவிட்ட கல்விநிறுவன் ஆசிரியர்கள் எப்படி சொல்லித் தருவார்கள்//

    முதலில் அரசாங்க பள்ளிகளில் சொல்லித்தர ஏற்பாடு செய்யவேண்டும்...பின் தனியார் பள்ளிகளுக்கும் காட்டாயம் ஆக்கப்படும்...அரசின் கையில் இருக்கிறது.

    உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  37. @@ நந்தலாலா இணைய இதழ்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  38. @@ Geetha Babu said...

    // good touch, bad touch differences மற்றும் மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்(thro meditation) கற்றுத்தந்தால் போதும்.. சிறு குழந்தைகளை தனியே விடக்கூடாது(உறவினர்கள் வீட்டில் கூட...)//

    நல்ல கருத்துக்கள் கீதா. மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.

    //this article reminds me of the film அச்சமுண்டு, அச்சமுண்டு starred by prasanna, sneha... such films never / seldom receive recognition...//

    இந்த மாதிரியான படங்கள் அவசியம் பார்க்கவேண்டும் அனைவரும்...ஆனால் நாம இதற்க்கு எல்லாம் நேரம் செலவழிப்பதில்லை என்பதே உண்மை.

    நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  39. @@ சுந்தரா said...

    //சொல்லியும் சொல்லாமலும் பிள்ளைகள் எவ்வளவோ கொடுமைகளை எல்லாநாட்டிலும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.//

    பணத்தின் பின் ஓடவே நேரம் சரியாக இருக்கும் போது குழந்தைகளை பற்றி யோசிப்பது இல்லை பெரும்பாலும்...

    கருத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. @@ மாத்தி யோசி...

    //ஒரு ஒரிஜினல் பிரெஞ்சுக்காரனோ, பிரிடிஷ்காரனோ, அமெரிக்கனோ இத்தகைய இழி செயலில் ஈடுபடுவதில்லை! //

    சகோ இதற்க்கு நான் எனக்கு தெரிந்த பதிலை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன்னாள் சென்னை பக்கத்தில மகாபலிபுரத்தில் ஒரு சிறுவர் ஆசிரமம் வைத்து நடத்தி கொண்டிருந்த ஒரு வெளிநாட்டவர் அங்குள்ள சிறுவர்கள் கடுமையான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியது பத்திரிகைகளில் வெளி வந்திருந்தது...அதனை பற்றிய செய்திகள் எல்லோரையும் அதிர வைத்தது அப்போது...

    இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் குறிப்பிட்டது மாதிரி ஒரிஜினல் அமெரிக்கன், பிரிட்டிஷ் காரர்கள் ரொம்ப சரியாக இருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது...அப்படினா இங்கே செய்தது யார்??

    அடுத்த நாட்டில் வந்து இவ்வளவு தைரியமாக செய்கிறார்கள். எங்கே இருந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான்...சந்தர்ப்பம் கிடைத்தால் அவனுக்குள் இருக்கும் மிருகம் ஆட்டம் போடவே செய்யும்.

    வெளிநாட்டிலும் சில நல்லவைகள் இருக்கிறது மறுக்கவில்லை. அங்கிருக்கும் ஆடை நாகரீகம், சில பழக்கங்களை பின்பற்றும் நம்மவர்கள் நல்ல விசயங்கலயும் பின் பற்றினால் நல்லதே.

    //கலாச்சாரம், பண்பாடு பற்றி எழுதப் போவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள்! கண்டிப்பாக எழுதுங்கள்! நீண்ட பின்னூட்டத்துடன் வருவேன்! //

    ஏற்கனவே ஆபத்தான கலாச்சாரம் என்ற ஒன்றி பற்றி எழுதி இருக்கிறேன் சகோ, அந்த பதிவையும் அதன் பின்னூட்டங்களையும், நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

    அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் அதனை பற்றி இன்னும் விரிவாக எழுதணும் என்று இருக்கிறேன்.

    பல விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டதிர்க்கு மகிழ்கிறேன் சகோ. வேலை பளு இடையில் நேரத்தை ஒதுக்கி கருத்துக்களை விரிவாகவும் தெளிவாகவும் சொல்லி இருப்பதுக்கு உங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  41. i had some problems with my computer.thats why i couldnt reply earlier
    here in manchester uk a lady brit nursery nurse was accused of child abuse,we trust people but here in western countries govt checks before employing any body in schools.
    there are helplines to inform about child abuse .so this abuse is everywhere there are no exceptions.
    i will fwd you some links about this when i have time

    பதிலளிநீக்கு
  42. கவுசல்யா, மிக தெளிவான பதிவு, கண்டிப்பாக எல்லோருக்கும் இது விழிப்புணர்வு தரும் பதிவாக இருக்கும், இதை படிப்பவர்கள், பிலாக் எழுததவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தனும் என்பது தான் என் கருத்து

    மற்ற லிங்குகளையும் போய் பார்க்கிறேன்.
    எல்லோரும் இது போல் எச்சரிக்கை பதிவு அடிக்கடி போட்டு நினைவூட்டுவது மிகவும் நல்லது.,

    பதிலளிநீக்கு
  43. சகோதரி இந்த விழிப்புணர்வு தொடரை கண்டபின் மீண்டும் கனத்து போகிறது மனம் இன்னும் மூடி வைத்து மறைத்து பேசி மற்றவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தாமல் குழந்தைகளுக்கு முதலில் இந்த விளிபுனர்வுகளை ஏற்படுத்த வேண்டும் பெற்றோரின் கடமை அது குறிப்பாக தாய் இந்த விசயத்தில் அக்கறை காட்டி சரியான விளக்கத்துடன் தவறை சுட்டி காட்டுவதன் மூலம் நாளைய சமூகம் ஒரு ஆரோக்கிய சமூகமாமாக வளர நாம் விதைப்போம் நல்ல விதைகளை ..............நன்றி சகோ தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...